அகத்திப்பூ – 25,
வெங்காயம் – 1 கப்,
தக்காளி – 1 கப்,
பச்சைமிளகாய் – 4,
பாசி பருப்பு (அ) துவரம் பருப்பு – 100 கிராம்,
தேங்காய் துருவல் – ½ கப்,
சீரகம், மிளகு – தலா ½ ஸ்பூன்,
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பூண்டு – 10 பல்.
செய்முறை:
குக்கரில் கழுவிய பருப்பு, அரிந்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, அரிந்த அகத்திப்பூ சேர்த்து மஞ்சள் தூள் போட்டு 4 விசில் விட்டு இறக்கவும். மிக்சியில் தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து மிளகு நைசாக அரைத்து கூட்டில் சேர்க்கவும். பின்பு தேவையான உப்பு சேர்த்து கடுகு உளுந்து தாளிக்கவும். இந்த கூட்டு சுவையும் சத்தும் நிறைந்தது.