AC-யின் அளவு 20°C முதல் 28°C வரை மட்டுமே இருக்குமாறு புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி 20°C-க்கு கீழ் குறைக்கவோ, 28°C-க்கு மேல் அதிகரிக்கவோ முடியாது. காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீடுகள், வணிக வளாகங்கள், வாகனங்களிலும் இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏ.சி-க்கு புதிய விதிமுறை.. ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல்
0
previous post