Sunday, February 25, 2024
Home » பணிக்குவராத தொழிலாளர்கள் கணக்கெடுப்பு.. பேருந்து இயக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

பணிக்குவராத தொழிலாளர்கள் கணக்கெடுப்பு.. பேருந்து இயக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

by Nithya

சென்னை: பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து துறை ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தனர். அதில் போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள் இருக்கின்றன. இந்நிலையில், அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால், நேற்று முதல் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பணிக்கு வராத தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணியை தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது. மாவட்ட வாரியாகவும், போக்குவரத்து கோட்டம் வாரியாகவும் விவரங்களை சேகரிக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. வேலை நிறுத்தம் செய்யாமல் பணிக்கு வர ஏற்கனவே போக்குவரத்துக்கழகம் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், பேருந்து இயக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தினால் எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பணிமனையை முற்றுகையிடவோ பேருந்துகளை சிறை பிடிக்கவோ முயன்றால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

 

 

You may also like

Leave a Comment

19 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi