மதுரை : வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. கோடாரி தைலத்துக்கு உரிமம் பெற வேண்டும் என ஆக்சென் நிறுவனத்துக்கு மாநில ஆணையம் நோட்டீஸ் வழங்கியது. சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோடாரி தைலத்தை சுங்கத்துறை முடக்கி வைத்தது. இறக்குமதி செய்த பொருட்களை விடுவிக்கக் கோரி ஆக்சென் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பது தொடர்பான பழைய விதிகளை மாற்ற வேண்டும். ஆக்சென் நிறுவனத்தின் பொருட்களை ஆய்வு செய்து விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம்: ஐகோர்ட் கிளை ஆணை
0
previous post