திருச்சி: திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த லிங்கம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மனைவி வீரம்மாள்(34). 3 மகள், ஒரு மகன் உள்ளனர். சென்னையில் இடியாப்ப வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் வீரம்மாள் கர்ப்பமானார். கருவை கலைக்க அதிகளவு கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீரம்மாளின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் வீரம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு வீரம்மாள் இறந்தார்.