புதுக்கோட்டை: பொன்னமராவதியில் கருக்கலைப்பின் போது பெண் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஸ்கேன் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் சென்டரை முறையாக பராமரிக்காத காரணத்தால் சுகாதாரத்துறை இணை இயக்குநர் உரிமத்தை ரத்து செய்தார். மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் நடத்திய சோதனைக்குபின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்த போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு சீல் வைக்க உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
புதுக்கோட்டை அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து அதன் பின் கருக்கலைப்புக்கு சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் அவருக்கு கருக்கலைப்பு செய்த போது எதிர்பாராத விதமாக அந்த கர்ப்பிணிப் பெண் இறந்துவிட்டார். இதனை அடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடி மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பு ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குனர் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்பு பொன்னமராவதியில் கருக்கலைப்பின் போது பெண் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஸ்கேன் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் சென்டரை முறையாக பராமரிக்காத காரணத்தால் சுகாதாரத்துறை இணை இயக்குநர் உரிமத்தை ரத்து செய்தார்.