டெல்லி: ஒன்றிய அரசு பணிகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இணைச் செயலாளர் அந்தஸ்திலான உயர்பதவிகளில் தனியார் துறையினரை நியமிக்க யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் 45 இணைச் செயலாளர்கள் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப விளம்பரம் வெளியிடப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் பணிகளில் நியமிக்கப்பட்டதால் எதிர்ப்பு எழுந்தது. ஒன்றிய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆர்ஜேடி உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிராக் பாஸ்வான் தலைமையிலான எல்ஜேபி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஒன்றிய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆர்ஜேடி உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நேரடி நியமன முறை சமூகநீதி மீதான நேரடி தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இடஒதுக்கீட்டு முறையையே ஒன்றிய அரசு ஒழிக்க பார்ப்பதாக மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே நேரடி நியமன நடைமுறை விளம்பரத்தை ரத்து செய்ய யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சூடனுக்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் சமூக நிதியை காக்கும் நடவடிக்கையாக நேரடி நியமன நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதனால் ஒன்றிய அரசில் பணியாற்ற நேரடியாக மூத்த அதிகாரிகள் 45 பேரை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.