சென்னை: வீட்டு வரி, சொத்து வரியை காலதாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கப்பட்ட 1% அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்; வரி உயர்வை குறைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை உயர்த்தியதால் மக்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.