சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில், இரவு நேரங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடப்பதாக அபிராமபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தபோது, ஒரு வீட்டில் மது விற்பது தெரிந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது 81 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மதன் (46), நாராயணசாமி தோட்டம் 1வது தெருவை சேர்ந்த தினேஷ் (எ) ஓட்டேரி தினேஷ் (27) ஆகியோர், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வந்து, இரவு நேரங்களில் கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். இதில், மதன் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி என 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.