Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அப்துல்வஹாப் எம்எல்ஏ உடன் பிரசாரம் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு பாடம் புகட்ட கை சின்னத்தை ஆதரியுங்கள்

*காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் பேச்சு

நெல்லை : தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜ அரசுக்கு பாடம் புகட்ட கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று அப்துல்வஹாப் எம்எல்ஏ உடன் கைச்சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் பேசினார்.நெல்லை மக்களவைத்தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். இவர் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பாளையங்கோட்டை சட்டமன்றத்தொகுதியில் அப்துல்வஹாப் எம்எல்ஏ உடன் நேற்று முன்தினம் வாக்குசேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நேற்று தியாகராஜநகர் பகுதியில் திறந்த ஜிப்பில் சென்று கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள் அனைவரும் வேட்பாளரை வரவேற்று கை சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து மாலையில் 38வது வார்டு விஎம்சத்திரம், ஆரோக்கியநாதபுரம், 37வது வார்டு கேடிசிநகர், 36வது வார்டு சமாதானபுரம், காமராஜ் நகர், மிலிட்டரி லைன், 35வது வார்டு போஸ்ட் ஆபீஸ், லூர்து நாதன் சிலை, 32வது வார்டு புதுப்பேட்டை தெரு, 33வது வார்டு பெருமாள் மேல ரத வீதி,பெருமாள் வடக்கு ரத வீதி,பெருமாள் கீழ ரத வீதி,தெற்கு பஜார், சிவன் மேல ரத வீதி, 34வது வார்டு சிவன் கீழ ரத வீதி, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி தெரு, பாளை மார்க்கெட் ஆகிய பகுதிகளில் கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஒவ்வொருவரும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தை தொடர்ந்து வைத்து வஞ்சித்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பைசா கூட வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை. ஒன்றிய பாஜ அரசுக்கு பாடம் புகட்ட அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடு புதுவையில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜு, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏஎல்எஸ் லட்சுமணன், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர் விஜிலா சத்யானந்த், மண்டல சேர்மன்கள் பாளையங்கோட்டை பிரான்சிஸ், தச்சநல்லூர் ரேவதி பிரபு, மேலப்பாளையம் கதீஜா இக்லாம் பாசிலா, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் பலராமன், வழக்கறிஞர் தினேஷ், பகுதி செயலாளர்கள் பாளையங்கோட்டை அன்டண் செல்லத்துரை மேலப்பாளையம் துபாய் சாகுல், கவுன்சிலர்கள் பாலம்மாள் முத்து, சர்மிளா கமாலுதீன், பேச்சியம்மாள், லட்சுமி உமாபதி சிவன், அனுராதா சங்கரபாண்டியன் சின்னத்தாய்கிருஷ்ணன்,இந்திரா மணி, வசந்தா ஜெகன், சகாய ஜுலியட் மேரி, சுதா மூர்த்தி, சுப்புலட்சுமி குணா,

கோகிலவாணி சுரேஷ், சபி அமீர் பாத்து, ராஜேஸ்வரி, வட்டச்செயலாளர்கள் ஆவின் கல்யாணி, ஜெயின்உசேன், அருள்இளங்கோ, பேபிகோபால், தளவாய், கதிரேசன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், உமாபதி சிவன், திமுக நிர்வாகிகள் பாலன் என்ற ராஜா, சுடலைக்கண்ணு, குறிச்சி ஆனந்த், மகளிர் அணி அனிதா, சுண்ணாம்பு மணி, கால்வாய் துரை பாண்டியன், பொறியாளர் அணி சாய்பாபா, மகேஷ், பாளை சதீஷ், குணா, சம்சுதீன், வாசுகி செல்லத்துரை, ஹரி மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.