சென்னை: ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதை உறுதி செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஆவின் பால்பண்ணையில் பணிபுரிந்தபோது இயந்திரத்தில் முடி சிக்கி உயிரிழந்த உமாராணி குடும்பத்துக்கு இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த உமாராணி குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி தேவை: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
previous post