ஆவடி: ஆவடி அருகே ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணியின்போது மின்கம்பி அறுந்து விழுந்து ஊழியர் படுகாயம் அடைந்துள்ளார். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் சதீஷ் தலையில் உயர் அழுத்த மின்கம்பி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த ரயில்வே ஊழியர் சதீஷ் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.