சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷப ராசியில் சென்ற சுமார் ஒரு மாதக் காலமாக சஞ்சரித்து வந்த சூரிய பகவான், புதனின் ராசியான மிதுனத்தில் சஞ்சரிக்கும் சுமார் ஒரு மாதக் காலத்தையே “மிதுன மாதம்” எனவும், ஆனி மாதம் என்றும் பூஜித்து வருகிறோம். மிதுனம், சூரியனுக்கு பகை வீடாகும்! ஜோதிட ரீதியில் தற்போது நிகழும் சூரியனின் மிதுன ராசி சஞ்சாரக் காலம், தனிச்சிறப்பு வாய்ந்தது!! ஏற்கனவே மிதுன ராசியில் நிலைகொண்டுள்ள பரம சுபக் கிரகமாகிய குரு பகவானுடன், சூரியன் இணைவது, மிகச் சிறந்த கிரகச் சேர்க்கையாகும்!இந்திரன் உள்ளிட்ட, தேவர்களுக்கெல்லாம் ஆச்சாரியரான, குரு பகவான், சூரிய பகவானுக்கும் குரு ஆவார்! மிதுனம், குருவிற்கு பகைவீடாகும். இருப்பினும், குருவும், சூரியனும் ஒரே ராசியில் இணைவது, உலக மக்களுக்கு, பெரும்பாலும் நன்மைகளையே அளிக்கும்.
“ஆனியில், கூனியும் நிமிர்ந்து நடப்பாள்…!” என்றொரு ஜோதிடப் பழமொழி உண்டு!! மூலிகைகளுக்கு, நோய் தீர்க்கும் சக்தியை அளிப்பவர், சூரியபகவான். அவர், ஔஷதகக் காரகரான (மருந்துகள், மூலிகைகள் ஆகியவற்றிற்கு ஆதித்தியம் கொண்டவர்) புதனின் ராசியான, மிதுனத்தில் சஞ்சரிக்கும் ஆனி மாதம் நீ்ண்டகால மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு ஏற்ற காலகட்டம் என “சுஸ்ருத ஸம்ஹிதை” கூறுகிறது. மகரிஷி சுஸ்ருதர் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் வாய்ந்த மகரிஷியாவார். அவர் இயற்றிய தன்னிகரற்ற வடமொழி மருத்துவ நூல் இதுவேயாகும்.சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவரும், வேதகால மருத்துவ மகரிஷிகளாவர். அறுவை சிகிச்சையில் பிரசித்திப் பெற்ற நவீன ஜெர்மானிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் இவ்விரு மகரிஷிகளும் இயற்றியுள்ள நூல்களைப் போற்றிப் புகழ்ந்து, பாராட்டியுள்ளனர்.
மூளை மண்டல, மிகவும் நுண்ணிய – சிக்கலான அறுவை சிகிச்சைகளைப் பெரும்பாலும் ஆனி மாதத்திலேயே மகரிஷி சுஸ்ருதர் தேர்ந்தெடுப்பது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்பதையும் பண்டைய வைத்திய நூல்கள் விவரித்துள்ளன.இதிலிருந்து, ஔஷதகக் காரகரான, புதனின் ராசியான மிதுனத்தில், சூரியன் சஞ்சரிக்கும் மிதுன ராசிக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெரியவருகிறது.தற்போது, இம்மாதத்தில் ஏற்படும் முக்கிய நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்! ஆனி 1-(15-6-2025): ஆனி மாதப் பிறப்பு. இன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்வது, மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது. ஏழு தலைமுறைகளுக்கு பாபங்களைப் போக்கி, நல் வாழ்வையளிக்கும்.
ஆனி 4-(18-6-2025): பகவதாஷ்டமி தெரிந்தோ, தெரியாமலோ இறைபக்தர்களுக்கு ஏதேனும் அபச்சாரம் செய்திருந்தால், அம்மாபாதகத்திலிருந்து விடுபடலாம். அடியார் பெருமக்கள் நம் குற்றம் குறைகளை பெரிதுபடுத்தாமல், நமக்காக இறைவனிடம் பக்தி – சிரத்தையுடன் வேண்டிக்கொள்வார்கள். மேலும், பழைய கடன் பாக்கியால் துன்புறுவோர்கள் இந்நன்னாளில், மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வைத்து, சிவபெருமானையும், மாலை வேளையாகிய சூரிய அஸ்தமன காலத்தில், மூன்று மண் அகல் விளக்குகளில் பசு நெய் தீபம் ஏற்றிவைத்து, ÿபைரவரையும் தரிசனம் ெசய்துவிட்டு, வந்தால் போதும். உங்கள் வறுமை நீங்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.
ஆனி 8-(22-6-2025): கூர்ம ஜெயந்தி. பகவான், ÿமந் நாராயணன், ஆமை உருவெடுத்து, அசுரர்களை அழித்து, உத்தமர்களைக் காப்பாற்றிய புண்ணிய தினம். இன்று பகவானை பக்தியுடன் பூஜிப்பது, மன நிம்மதியையும், ஆேராக்கியமான வாழ்க்கையையும் தந்தருளும். மேலும், இன்று கிருத்திகை விரதம். இன்று முழுவதும் நிர்ஜலமாக (நீரைக்கூடப் பருகாமல் – சுத்த உபவாசம்) இருந்து, மாலை நேரத்தில் வீட்டில் பூஜையறையில், மண் அகல் விளக்குகளால் நல்லெண்ணெய் தீபமேற்றி, கிழக்குத் திசையில் ஔிரும் கிருத்திகை நட்சத்திரத்தை தரிசனம் செய்து, செல்வத்திற்கு அதிபதியான ÿ மகாலட்சுமியையும் ÿமுருகப் பெருமானையும் வணங்கி, உபவாசத்தை முடித்துக்கொண்டு, போஜனம் செய்திடல் வேண்டும். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த முருகப் பெருமானை, கார்த்திகைப் பெண்கள் போற்றிப் பாதுகாத்து வளர்த்தது போல், இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கும் அனைத்து பக்தகோடிகளுக்கும் அழகும் – அறிவும் மிகுந்த குழந்தைச் செல்வங்களையும், உங்கள் இல்லத்தாரையும் எவ்விதத் தீமையும் அண்டவிடாது, போற்றிப் பாதுகாப்பது உறுதி என ஸ்காந்தபுராணம் பட்டயம் கூறுகிறது.
ஆனி 9-(23-6-2025): பிரதோஷம். இன்று மாலையில், சிவ தரிசனம் அனைத்து பாபங்களையும் போக்கி, குடும்பத்தில் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும்.
ஆனி 10-(24-6-2025): கிருஷ்ண அங்கார சதுர்த்தசி. இன்று, யம தர்ம ராஜரைப் பூஜிப்பதால், நீண்ட ஆயுளும், வியாதியற்ற வாழ்வையும் அளிக்கும்.
ஆனி 11-(25-6-2025): அமாவாசை. இன்று மறைந்த நம் முன்னோர்களை, தர்ப்பணம், திதி பூஜை போன்றவை மூலம் மதியம் 1 மணி முதல் 3 மணிக்குள்ளாக பித்ருக்களைப் பூஜித்து, கன்றுடன்கூடிய பசுமாட்டிற்கு பசும் புல் அகத்திக் கீரை உண்ணக் கொடுத்து, இப்பூஜையை முடித்துக் கொள்ளலாம். முக்கியமாக இப்புண்ணியக் காலகட்டத்தில் மாமிசம், வெங்காயம், பூண்டு, வெள்ளைகத்தரிக்காய், வெற்றிலை பாக்கு தாம்பூலம் தரித்தல், துவரம்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி போன்ற பதார்த்தங்களைத் தவிர்த்தல் அவசியம். இவ்விதிகளைக் கடைப்பிடிப்பதால், பாபங்கள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும் பொங்கும். முற்பிறவி பாபங்கள் நீங்கும். குலவிளக்கு சந்ததிச் செல்வங்களாகிய குழந்தைகளுக்கு பித்ருக்களின் ஆசியினால், கல்வி கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கி, அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவர்.
ஆனி 12 – (26-6-2025): வியாழக்கிழமை முதல், இம்மாதம் 20 (4-7-2025)-ந் தேதி வரை வராஹி நவராத்திரி. இந்த ஒன்பது நன்னாட்களில், தினமும், மாலை வேளையில், அரிசி மாக்கோலமிட்டு, ÿவராஹி அம்மனின் திருவுருவப்படத்தை எழுந்தருளச் செய்து, வாழைத் தண்டு நாரினால் திரி செய்து, நெய்தீபம் ஏற்றிவைத்து மல்லிகை, முல்லை, ஜாதி, தாமரைப் பூக்களினால் அர்ச்சித்து ÿ தேவி அம்பாளைப் பூஜித்து,லலிதா சகஸ்ரநாமம், துர்கா ஸப்தஸதீ, சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி அதிசக்திவாய்ந்த, மந்தர ப்ரயோகம் செய்விக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட ஸ்லோகங்களை எவை-எவை முடிகிறதோ அவற்றைச் சொல்லி அல்லது ஒலிநாடாக்களில் அல்லது கைபேசியில் கேட்டாலே போதும். ஜனன ஜாதகத்தில், சாயாக் கிரகங்களாகிய ராகு – கேதுவினால் உண்டாகும் தோஷத்தை போக்கக்கூடியதும், செவ்வாய் தோஷத்தையும்ம அடியோடு களைவதாகவும் ÿவராஹி புராணம் அருதியிட்டுக் கூறுகிறது, மேலும், உங்களைப் பிடிக்காத, உங்களுக்கு, உங்களுடைய எதிரிகளால் ஏவப்பட்ட ஏவல், பில்லி சூனியம் ஆகியவை உங்களை அணுகவிடாது காத்தருள்வாள் அன்னை வராஹி தேவி. இந்தத் தினங்களில், தினமும் ஒவ்வொரு வகை சுண்டல் அல்லது இனிப்பு வகையறாக்களை வராஹி அம்மனுக்கு நைவேத்தியம் செய்வித்து, கோயிலுக்குச் சென்று பக்தர்களுக்கு முடிந்த அளவு அவற்றை விநியோகம் செய்வித்து, சுமங்கலிப் பெண்களுக்கு, வெற்றிலை, பாக்கு, பழம், ரவிக்கைத் துண்டு (வசதியுடையோர் புடவையும் வஸ்திர தானமும்) கொடுத்து வணங்க வேண்டும். உங்களுக்கு சர்வ மங்கலங்களையும் தந்தருள்வாள் அன்னை வராஹி தேவி! தினகரன் வாசக அன்பர்கள் முடிந்தவரை இதைக் கடைப்பிடித்து அனைத்துவித நலன்களையும் பெறவேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
ஆனி 13 – (27-6-2025): ÿஅமிர்த லமி விரதம். இன்று உபவாசமிருந்து, ÿமஹாலக்ஷ்மியைப் பூஜிப்பதால், நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான வாழ்க்கையும் கிட்டும். கடன்கள் அடைபடும்.
ஆனி15-(29-6-2025): சதுர்த்தி விரதம். இன்று உபவாசமிருந்து, விநாயகப் பெருமானை, அறுகம்புல்லைக் கொண்டு பூஜிப்பதாலும், வெற்றிலைப் பாக்கு, தேங்காய் பழங்கள், மோதகங்கள் அமுது செய்வித்து, வேதம் ஓதிய பிரம்மச்சாரிக்கு, அன்னதானமும், தங்களால் இயன்ற காணிக்கையை. தட்சிணையாகக் கொடுத்து, நமஸ்கரித்தால், அனைத்து தடங்கல்களும் விலகும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். முக்கியமாக, இன்றைய தினத்தில், சந்திரனை தரிசித்தல் கூடாது. ஒவ்வொரு மாதமும் தவறாது அனுஷ்டித்தால், அனைத்துவித நலன்களையும் ஒருங்கே பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் மனநிறைவுடனும், மன மகிழ்ச்சியுடனும்! மேலும், இன்றைய தினம் மதுரைக்கு அருகே வாதவூரில் பிறந்த, அவ்வூரின் பெயரையே இயற்பெயராகக் கொண்டவரும், இளமைப் பிராயத்திலேயே சிவத் தொண்டிலும் பக்தியிலும், ஜீவகாருண்யத்திலும், ஒழுக்கத்திலும் தன்னிகரற்ற வாதவூராரை, பாண்டிய மன்னன், “தென்னவன் பிரமராயன்” எனும் பட்டப் பெயரளித்து, இளம்பிராயத்திலேயே தனது அரசவையில், மந்திரி ஸ்தானத்தை அளித்து, பெரும் பேற்றைப் பெற்ற “திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” எனும் சொல்லிற்கிணங்க திருவாசகத்தை நமக்குத் தந்தருளிய மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த புண்ணிய தினம். மாணிக்கவாசகர் திருவாக்கினாலே சொல்லக் கேட்டு, எம்பெருமான் ஈசனே எழுதிய விலைமதிப்பில்லா ஒப்பற்ற
“தங்கநிகர்” வார்த்தை பிரயோகங்கள்!
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே, சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவப தினியேஇப்பாடலை பக்தி சிரத்தையுடன் பாடினாேலா அல்லது கேட்டாலே, சிவபெருமானே நம் அனைவருக்கும், மாதா, பிதா, குருவாகவும் தெய்வமாக இருந்து நம்ைம காத்தருள்வார்.
ஆனி 15-(29-6-2025): சமீ கௌரி விரதம். இவ்விரதத்தை, காலையில், குளித்து முடித்தபின், பூஜையறையில் மாக்கோலமிட்டு, அம்பாள் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, கலசம் வைத்து, ஒன்பது அகல் விளக்குகளில் நெய் தீபமேற்றி வைத்து, லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி இவற்றை எவற்றை முடிகிறதோ அவற்றைப் பாராயணம் செய்து, ஒரு சுமங்கலிக்கு அன்னதானமளித்து, தாம்பூலம் கொடுத்து, வசதியுள்ளவர்கள் புடவை – ரவிக்கை கொடுத்து அல்லது ரூ51 தட்சிணையாகக் கொடுத்து, வணங்க பெற்றோருடன் (தாய் – தந்தையுடன்) ஏற்பட்ட பிணக்கு நீங்கி, அனைவருடனும் கூடியிருந்து குளிர்ந்திடுவீர்கள், மட்டற்ற மகிழ்ச்சியுடன் விளங்கிடுவீர்கள்.
ஆனி 16 – (30-6-2025): ஸ்கந்த பஞ்சமி. இன்று, விரதமிருந்து ÿமுருகப் பெருமானைப் பூஜிப்பதால், குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும், மன-நிறைவும் நிலவும்.
ஆனி 17-(1-7-2025): குமார சஷ்டி, இன்று விரதமிருந்து, முருகப் பெருமானை வழிபடுவதால், அவனருள் கிட்டும். சஷ்டியன்றுதான், ÿமுருகப் பெருமான், தேவாதி தேவர்களின் சேனாதிபத்யத்தையும், சகல ஐஸ்வரியங்களுடன்கூடிய ச்ரேயஸையும் பெற்று, தன்னிகரற்று விளங்கினார். மாதந்தோறும் இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர்க்குபசி பிணியற்ற நீண்ட ஆயுள் ஆரோக்கியம், மன தைரியம், வீரியம், பராக்கிரமம் சகல காரிய சித்திகளையும் ஒருங்கே பெற்று மகிழ்வர். மேலும், இன்றைய ஆனித் திருமஞ்சனத்திற்கு, தேன், தூய நாட்டுப் பசுவின் பால், கரும்புச் சாறு, இளநீர், பஞ்சாமிருத அபிஷேகத்திற்கு பழவகையறாக்கள், சந்தனம், நறுமண மலர்களைக் கொடுத்து, அபிஷேக ஆராதனைகளைக் கண்டு தரிசித்தால், வாழ்க்கையில் வசந்தம் வீசும்; சொந்தத் தொழில் புரிவோர்க்கு தொழிலில் கடும் போட்டி பொறாமை அனைத்துவிதத் தடைக் கற்களையும், நீங்கள் முன்னேற உதவும் படிக்கட்டுக்களாக மாற்றும் வல்லமை பெறுவீர்கள். தொழிலில் மகத்தான வெற்றி பெற்று, சர்வ வல்லமை பொருந்தியவர்களாக பவனிவருவீர்கள் என்பது திண்ணம்.
ஆனி 20-(4-7-2025): பகவான் மஹாவிஷ்ணுவின்,திவ்ய ஹஸ்தத்தை அலங்கரிப்பவரும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திர புண்ணிய தினத்தில் அவதரித்தவரும், ரதாங்கம், சக்ரபாணி, திகிரி, சக்கர ராஜன், சுதர்ஸன், நேமி என்கிற திருநாமமுடையோனும், பெருமானுக்கு இணையாகப் போற்றிக் கொண்டாடப்படுபவரும், பகவானின் திருமுகத்தில் ஆயிரம்கோடி சூரியப் பிரகாசத்திற்குப் போட்டியாக, ஒளிவெள்ளத்தால் பிரகாசிப்பவரும், திருமாலின் உள்ளக் கிடக்ைக உணர்ந்து, அதற்கேற்றவாறு உடன் செய்கையில் ஈடுபடுபவரும், உலக இயக்கத்திற்கே ஆதாரஸ்வரூபியும், சுக்ல யஜுர் வேதத்தினால் போற்றிக் கொண்டாடப்படுபவரும், பஞ்சாயுதங்களில் முதன்மை பெற்றவரும்,
16 திருக்கரங்களில், 16 வகையான திவ்யாயுதங்்களைத் தரித்து இருப்பவரும், துஷ்டர்களை நிக்கரகம் செய்து, பக்தர்களைக் காக்கும்பொருட்டு வலது திருக்கரத்தில் திகழ்பவரும், அதன் பொருட்டே “ஆழியான்” என்ற அடைமொழிப் திருப்பெயரை பகவானுக்கே பெற்றுத் தந்தவரும்,
“தேருங்கால்தேவன் ஒருவனேயென்றுரைப்பர்
ஆருமறியாரவன்பெருமை ஓரும்
பொருள்முடிவுமித்தனையே எத்தவம்செய்தார்க்கும்
அருள்முடிவதாழியான்பால்
திருமழிசையாழ்வாரால் கொண்டாடப்பட்ட வருமாகிய மஹா சுதர்ஸன சக்கரத்தின் அவதார தினம். இன்றைய தினத்தில் சுதர்ஸனாஷ்டகம் வாசிப்பதும், கேட்பதும் மிகச் சிறந்த புண்ணிய பலன்களையும் தரவல்லதும், ஏவல், பில்லிசூனியம் மற்றும் செய்வினை நம்மையணுகா வண்ணம் காத்தருள்வார், சுதர்ஸனாழ்வார்! பிறப்பு இறப்பற்ற மோட்ச மார்க்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்பவரும், ஞானத்தைத் தந்தருள்பவரும், உடல் ஆரோக்கியம், பதினாறுவகைச் செல்வங்கள், எதிரிகளற்ற நல்வாழ்வை நல்கிடுபவரும், இன்றைய தினத்தில் கோயிலுக்குச் சென்று, சுதர்ஸன ஆழ்வாரை தரிசித்து, மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வர, பரிபூரண அருளுக்குப் பாத்திரர்களாவீர்கள். நாம் அவரை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், சுதர்ஸன ஆழ்வார் நம்மை நோக்கி 100 அடி எடுத்து வைப்பார் என்பது திண்ணம்.
ஆனி 21-(5-7-2025): ÿலட்சுமி நரசிம்மர் அவதரித்த சுவாதி திருநட்சத்திரம்.
இந்நன்னாளில்,உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஹல்வதோ முகம் ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும், ம்ருத்யும் நமாம்யஹம் எனும் அதி சக்திவாய்ந்த மஹா மந்திரத்தை 108 முறை ஜபித்து, முடிந்தவர்கள் ருணவிமோசன ஸ்தோத்திரம் வாசித்து, அல்லது காதால் சொல்லக்கேட்டு வெல்லம், சுக்குப்பொடி, ஏலக்காய் கலந்த பானகத்தை நைவேத்தியம் செய்து வழிபட்டால்போதும், சகல நலன்களும் உங்களை வந்தடையும்.
ஆனி 21-(5-7-2025): பெரியாழ்வாரின் திருநட்சத்திரம்.
ஆனி 22-(6-7-2025): ஆஷாட ஏகாதசி. பண்டரி புரத்தில் பகவான் ÿபாண்டுரங்கனே ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதாக ஐதீகம். பண்டரிபுர தரிசனம் விசேஷம்.
ஆனி 23-(7-7-2025): சாதுர் மாச விரதம் ஆரம்பம். துறவிகள், ஓரிடத்தில் தங்கி, தவமிருக்கும் கால ஆரம்பம்.
ஆனி 24-(8-7-2025): பிரதோஷம். இன்று மாலை சிவ தரிசனம் செய்தால், அனைத்து பாபங்களும் அடியோடு நீங்கிவிடும். மேலும், இன்று ஜேஷ்டாபிஷேகம். உங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு, நெடுநாட்களுக்கு முன்பாக நீங்கள் நேர்ந்துகொண்ட அபிேஷக ஆராதனைப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் இந்நன்னாள்!
ஆனி 25-(9-7-2025): ÿலட்சுமி நரசிம்மர் அவதரித்த வளர்பிறை சதுர்த்தசி திதி. இந்நன்னாளில், அரிசி மாக்கோலமிட்டு, ÿலட்சுமி நரசிம்மர் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, துளசி தளத்தினால் அர்ச்சனை செய்வித்து, பானகம் நைவேத்தியம் செய்து, கோயிலுக்குச் சென்று பக்தர்களுக்கு விநியோகித்தால் சகல தோஷங்களும் விலகிடும். எதிரிகள் இல்லா நிலையும், எவ்விதத் தடங்கலையும் உண்டாக்கமாட்டார்கள்.
ஆனி 26-(10-7-2025): வியாஸபூஜை. குரு பூர்ணிமா, பௌர்ணமி விரதம். வேதங்களை நமக்கு வகுத்தளித்த வியாஸ பகவானையும், பாடம் கற்பித்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் ஆகியோரைப் பூஜிக்கும் புண்ணிய தினம். ஆசிரியப் பெருமக்களின் இல்லங்களுக்குச் சென்று, தங்களால் இயன்ற வஸ்திரங்கள் அல்லது பூ பழங்களை அளித்து, வணங்கி, அவர்களின் ஆசியைப் பெற்றால், அனைத்துவித வளங்களும் உங்கள் இல்லத்தை வந்தடையும்.
ஆனி 26-(10-7-2025): கோகிலா விரதம் ஒருசிலருக்கு (ஆண்களுக்கு) பெண் குரலும், பெண்களுக்கு (ஆண்களுக்கு உண்டான கரகரத்த குரலுடன் விளங்குவர்) இக்குறைபாடுகள் நீங்கும். குரல் வளம் உண்டாகி, பேரும் புகழுடனும் சகல வளங்களையும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வீர்கள்.
ஆனி 30 – (14-7-2025): சங்கடஹர சதுர்த்தி. இன்று, விநாயகப் பெருமானைப் பூஜிப்பது தடங்கல்களை அகற்றும்.”ஓம் நமோ ேஹரம்ப மதமோதித மம சங்கடம் நிவாராய, நிவாராய” என்று இன்று காலை முதல், இரவு (9 மணி) வரை, உபவாசம் இருந்து ஒன்பது அல்லது பதினெட்டு முறை முடிந்தால்,108 தடவைகள் மேலே கூறியுள்ள சக்திவாய்ந்த மகா மந்திரப் பிரயோகமாகிய ஸ்லோகத்தை ஜபித்து, பிறகு சந்திரனை தரிசித்து வணங்கிவிட்டு, 9 கொழுக்கட்டைகள், தேங்காய், பழங்களுடன்கூடிய வெற்றிலை, பாக்குகளை நைவேத்தியம் செய்வித்து, பிறகு விரதத்தை முடித்து, குடும்பத்தாருடன் சாப்பிடலாம். இவ்வாறு பக்தி சிரத்தையுடன் இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு, சகல சௌபாக்கியங்களையும் பெற்று, உங்கள் அபிலாஷைகளனைத்தும் நிறைவேறிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
ஆனி 32 – (16-7-2025): கிருஷ்ணபட்ச சஷ்டி விரதம். மேலும், இன்றைய இரவு தட்சிணாயன புண்ணிய காலம். ஆடி மாதப் பிறப்பு (இரவில்).