டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்தது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் துணை முதல்வரை தொடர்ந்து அக்கட்சியின் எம்.பி.யையும் அமலாக்கத்துறை கைது செய்தது.