மதுரை: ஆடி அமாவாசை தினத்தையொட்டி சதுரகிரி மலையில் ஆக.16ல் அன்னதானம் வழங்க ஐகோர்ட்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சதுரகிரி மலையில் காலை 6 மணிமுதல் மாலை 3 மணிவரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனையுடன் அன்னதானம் வழங்க ஐகோர்ட்கிளை அனுமதி வழங்கியது.