புதுடெல்லி: ஆதாரை கருவியாக பயன்படுத்தி ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய சமூக நலன்களை மோடி அரசு மறுத்து வருகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாலும் பல தரப்பினரின் வெறுப்புக்கு உள்ளாகி இருப்பதையும் தவிர்க்க தொழில்நுட்ப பரிசோதனை மேற்கொண்டு வருவதாக கூறி மோடி அரசு ஏமாற்றி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 26 கோடி பேர் வேலைக்கான அடையாள அட்டை வைத்திருக்கும் நிலையில், காலக்கெடுவை 4 முறை நீட்டித்த பின்னர், 41.1 சதவீதம் பேர் ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு தகுதி இல்லாதவர்கள் என்று அரசு கூறியுள்ளது. இதன் மூலம், ஆதாரை கருவியாக பயன்படுத்தி ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய சமூக நல திட்டங்களின் பலன்களை மோடி அரசு மறுத்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.