டெல்லி: பிரதமர் மோடியின் மவுனத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தோம் என மக்களவை காங்கிரஸ் எம்.பி.,க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறும் அளவுக்கு எங்களிடம் பலம் இல்லை என்பது எங்களுக்கே தெரியும். மணிப்பூர் வன்முறை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்திய நாட்டு மக்கள் நலன் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை; பிரதமர் வர வேண்டும் என்றே கூறினோம் எனவும் கூறினார்.