செங்கோட்டை: செங்கோட்டை பஸ் நிலைய பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் நீண்ட தாடி தலைமுடியுடன் அழுக்கடைந்த உடலுடனும் மிகவும் பரிதாப நிலையில் திரிந்துகொண்டிருந்தார். நேற்று அவ்வழியாகச் சென்றபோது இதைப் பார்த்த செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன், மனிதநேயத்துடன் சம்பந்தப்பட்ட வாலிபரிடம் பேசியதோடு அவரை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். வாலிபருக்கு வேண்டிய சுகாதாரம், உதவிகள் வழங்கி புத்தாடை அணிவித்து மருத்துவ சிகிச்சைகள் வழங்கி பராமரித்து வருகிறார்.
இவரைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. விவரம் அறிந்தால் பொதுமக்கள் செங்கோட்டை அரசு தலைமை மருத்துவரையோ அல்லது செங்கோட்டை காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மன நோயாளி ஒருவரை மனிதநேயத்துடன் மீட்டு, அவருக்கு தேவையான உதவிகள் வழங்கிய அரசு தலைமை மருத்துவரைபொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.