மும்பை: டெல்லியில் இருந்து கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு செல்லும் ஏர்இந்தியா விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். இந்நிலையில் திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமானம் சான்பிரான்சிஸ்கோ செல்லாமல் ரஷ்யாவின் மகாதன் விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு விமானம் தரையிறங்கியது.
பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினார்கள். வேறு விமானம் மூலமாக அவர்கள் சான்பிரான்சிஸ்கோ அனுப்பி வைக்கப்பட்டனர்.