டெல்லி: இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயமான அவசர நிலை பிரகடனப்படுத்தி 50 ஆண்டு நிறைவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அந்நேரத்தில் இந்திய ஜனநாயகத்தையே காங்கிரஸ் அரசாங்கம் கைது செய்தது போல் இருந்தது. அவசரகாலத்தின் இருண்ட நாட்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர வேண்டும். “1975 – 1977 இடையிலான அவமானகரமான காலம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது நான் ஆர்எஸ்எஸ்-இல் இருந்தேன். ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியது அவசர நிலை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம்: பிரதமர் மோடி
0