படைப்புத் தொழிலின் போது இறைவன் (பாதி திறந்த கண்களுடன்) யோக நிலையில் நின்று அதைச் செய்கிறான். அழிக்கும்போது நெற்றிக்கண் வழியால் அழிக்கிறான். ஆனால் காத்தல் தொழிலின் போதோ ஆயிரமாயிரம் கண்களால் உயிர்களைக் கண்டு அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே உற்று நோக்கி அவற்றிற்கு வேண்டியதைச் செய்து காத்தருளுகிறார். அதனால், அவனை ஆயிரங்கண்ணோன் என அழைக்கிறோம்.
அவன் ஆயிரமாயிரம் கண்களை உடையவன் என வேதநூல்கள் துதிக்கின்றன. மயில் ஆயிரங் கண்ணுடைய பறவையாக இருப்பதால் அவன் மயிலாக உருவகிக்கப்பட்டு, காத்தல் தொழிலை நடத்த ஆடும் ஆட்டம் கௌரிதாண்டவம் எனப்படுகிறது. காத்தல் தொழிலை நடத்தும்போது மயில்தோகை ஏந்தியவனாகச் சித்தரிக்கப்படுகின்றார்.
தாலிபாக்கியம் அருளும் சுமங்கலி பூஜை
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் ஜனவரி மாதம் முதல் தேதி சுமங்கலி பூஜை விமரிசையாக நடைபெறும். இந்த பூஜையில் நூற்றுக்கணக்கில் திருமணமான பெண்கள் கலந்து கொள்வர். அன்றிரவு ஏழு மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். பூஜை முடிந்ததும் பெண்கள் தங்களுக்கு அளிக்கப்படும் மஞ்சள் கயிற்றை தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்வர். இதனால் தாலிபாக்கியம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.
பதவி உயர்வு பெறதிருத்தணியிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ள நல்லாட்டூர் திருத்தலத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயருக்கு முறைப்படி பூஜை செய்வோர் உயர் பதவியை அடைவார்கள்.
கோரிக்கைகள் நிறைவேற பிறருக்கு பாதிப்பில்லாத நல்ல கோரிக்கை களைக் கொண்டார், அவை நிறைவேற நாட வேண்டிய திருக்கோயில் மேல் மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பீடமாகும். அங்கு சென்று சிறப்புப் பூஜைகளை அம்மனுக்கு செய்து விட்டு பின்பு சில ஏழைகளுக்கேனும் அன்னதானம் புரிய நற்பலன் கிட்டும்.
ஆயிரம் தாமரைமலரால் வழிபாடு
ஆயிரம் வடிவு காட்டும் சிவபெருமானை, ஆயிரம் இதழ் கொண்ட ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சிப்பது பெரும் புண்ணியமாகும். திருமால் ஆயிரம் செந்தாமரை மலர்களைக் கொண்டும், பிரம்மதேவன் ஆயிரம் பொன் தாமரை மலர்களைக் கொண்டும், இந்திரன் ஆயிரம் நீலத் தாமரை மலர்களைக் கொண்டும், சரஸ்வதி ஆயிரம் வெண் தாமரை மலர்களைக் கொண்டும், அர்ச்சனை புரிந்து வழிபடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. திருவீழிமிழலையில் திருமால் பெருமானை ஆயிரம் செந்தாமரை மலர்கொண்டு அர்ச்சித்ததையும், திருந்து தேவன்குடியில் (நண்டாங்கோயில்) இந்திரன் ஆயிரம் நீலத் தாமரைகளைக் கொண்டு வழிபட்டதையும் புராணங்கள் மூலம் அறிகிறோம்.
மகாகாலேஸ்வரர் (உஜ்ஜயினி, மத்திய பிரதேசம்)
இந்த சிவஸ்தலம் மத்தியபிரதேசத்தில் சிப்ரா நதிக்கரையில் உஜ்ஜயினி நகரத்தில் அமைந்துள்ளது. இக்கலியுகத்தின் இறுதியில் அவதரித்து அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தி அளித்து அவர்களை தன்னுடன் சாந்தி தாமத்திற்கு (மோட்சம்) அழைத்துச் செல்வதால் இவர் மகாகாலேஸ்வரர் என
அழைக்கப்படுகிறார்.
ஞானப் பூங்கொடி அம்பிகையை ஞானேஸ்வரி என்பர். பூங்கொடி கொழுக்கொம்பைப் பற்றிப் படர்ந்து மேல்நோக்கிச் செல்வது போல் ஞானமானதும் ஆண்டவன் என்னும் கொழுக்கொம்பைப் பற்றி மேல் நோக்கிப் படர்கிறது. அம்பிகை இறைவனைப் பற்றிப் படரும் கொடியாக இருப்பதால் அவள் ஞானவல்லி எனப்படுகிறாள்.
ராதாகிருஷ்ணன்