சென்னை: ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ரூ.10,000 டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு ரூ.50,000 இழப்பீடு தர நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆக. 12ம் தேதி மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி மீண்டும் செப்டம்பர் 10ல் நடத்தப்பட்டது. செப்டம்பர் 10ல் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி கண்டு ரசிக்க முடியாததால் ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு ரூ.50,000 வழங்க உத்தரவு!!
0