சென்னை: சென்னையில் பருவமழை முடியும்வரை புதிதாக பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்திவைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்திவைக்க முதல்வர் அறிவுறுத்தியதாக அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார். மழைநீர் கால்வாய் அமைப்புகள் முறையாக தூர்வாரப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் பழுதான சாலைகளை அடுத்த 2 வாரங்களில் முழுவதுமாக சீரமைக்க அதிகாரிகளுக்கு நேரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.