SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏரியில் நீர்மட்டம் குறைந்தது தேக்கடியில் படகு சவாரி நிறுத்தம் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

2017-05-29@ 15:09:15

கூடலூர் : முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால், தேக்கடி ஏரியில் சுற்றுலா படகுச்சவாரி நேற்று முதல் நிறுத்தப்பட்டது. இதனால் தேக்கடி வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில், யானைசவாரி, டைகர்வுயூ, நேச்சர்வாக், பார்டர்வாக், மூங்கில் படகுசவாரி என பல பொழுதுபோக்கு விஷயங்கள் இருந்தாலும், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விருப்பத்தில் படகுச்சவாரி முதலிடம் வகிக்கிறது.

தேக்கடியில் 2009ல் நடந்த படகு விபத்துக்குப்பின் சுற்றுலாப்படகுகளின் எண்ணிக்கை 11ல் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டது. இந்த ஐந்து படகுகளிலும் தற்போது நாளொன்றுக்கு சுமார் 1400 பேர் வரை படகுச்சவாரி செய்யமுடியும். நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லததால் கடந்த மாதம் பெரியாறு அணை நீர்மட்டம் 110 அடியாக குறைந்தது.

அப்போது, சுற்றுலாப் படகுகள் தேக்கடி படகுத்துறைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தற்போதைய படகுத்துறையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் புதிய படகுத்துறை அமைத்து சவாரி சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 108.70 அடியாக குறைந்தது.

நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், ஏரியில் படகுப்பாதையில் தண்ணீருக்கு வெளியே தெரியும் மரக்கட்டைகளுக்கு இடையே படகை பாதுகாப்பாக ஓட்டிச்செல்ல முடியாது. இது படகுகளில் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கும் உகந்ததல்ல. எனவே நேற்று முதல் தேக்கடி ஏரியில் சுற்றுலா சவாரி செல்லும் கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழக மற்றும் வனத்துறையின் படகுகள் நிறுத்தப்பட்டன.
படகுச்சவாரி திடீரென நிறுத்தப்பட்டதால், விடுமுறை கொண்டாட்டங்களுக்காக தேக்கடி வந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் தேக்கடி படகுத்துறை வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2020

    17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2020

    16-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-02-2020

    15-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • attack20

    புல்வாமா தியாகிகளின் முதலாமாண்டு நினைவு தினம்: "இந்தியா ஒருபோதும் மறக்காது" பிரதமர் மோடி உருக்கம்.

  • puthudelhi20

    புது டெல்லியில் 20 வது 'ஹுனார் ஹாத்' திறப்பு விழா: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்