கும்பக்கரையில் குளிக்க தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
2017-05-29@ 15:08:00

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவியில், மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதி மற்றும் கொடைக்கானலில் பெய்யும் கனமழை காரணமாக நீர் வரத்து இருக்கும்.
கும்பக்கரை அருவி ரம்யமான இயற்கை சூழலில் அமைந்துள்ளதால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் மழை பெய்யாத காரணத்தால் அருவி வறண்டு காணப்பட்டது. மேலும், தண்ணீர் தேடி வன விலங்குகள் அருவி பக்கம் வரும் அபாயம் நிலவியது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் பெய்த மழை காரணமாக கடந்த 18ம் தேதி நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் மலையடிவார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
கொட்டும் மழையிலும் கூட்டம் குறையவில்லை
கொடைக்கானலில் 2 மணிநேரம் மழை ஆர்ப்பரிக்கிறது வெள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
கொடைக்கானல் அருவி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்