கோடை மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
2017-05-12@ 14:18:59

குலசேகரம் : மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு திற்பரப்பில் அருவியாக கொட்டுகிறது. இங்கு குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் எப்போதும் தண்ணீர் கொட்டும். ஆனால் கோதையாற்றில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவதால் தண்ணீர் குறைந்து விட்டது. குறிப்பாக மழை இல்லாத காலத்தில் அருவி தண்ணீர் இல்லாமல் வறண்டு விடுகிறது.
குமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்டதால் கடந்த 1 மாதமாக தண்ணீர் இல்லாமல் கோதையாறு உலர்ந்த பாறையாக காட்சியளித்தது. இந்த நிலையில் சில தினங்களாக மலையோர பகுதிகளில் பெய்யும் கோடை மழை, அவ்வப்போது கனமழையாக கொட்டி வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. 1 மாதமாக வறண்டு கிடந்த திற்பரப்பு அருவியில் தற்போது தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
குமரியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
திற்பரப்பில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
திற்பரப்பு அருவியில் உற்சாக குளியல் - 'செல்பி'
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு திற்பரப்பில் திரண்ட சுற்றுலா பயணிகள்
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறை முடிந்தும் களை கட்டும் திற்பரப்பு அருவி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்