SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மேலும் 2 புதிய படகுகள்

2017-05-10@ 12:03:39

புதுச்சேரி : புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாமில் விருந்து நிகழ்ச்சி நடத்தும் வகையில் 2 புதிய படகுகள் தயாராகி வருகிறது. சிறந்த சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்கள் அமைந்துள்ளன. இதில் நோணாங்குப்பம் பாரடைஸ் பீச் அனைவருக்கும் முதன்மை தேர்வாக இருந்து வருகிறது.

சங்கராபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இந்த பீச் அமைந்துள்ளது. ஆற்றின் கழிமுக பகுதியில் தீவு போன்ற அமைப்பு இருப்பதால் இது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புது அனுபவத்ைத தரும். இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகளை கொண்டு செல்வதற்கு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி இயக்கப்படுகிறது. இதற்கென ஸ்பீட் போட், பாண்டூன், சீ குரூயிஸ், வாட்டர் பைக் என சுமார் 20க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் சவாரிக்கான படகுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் நின்று சவாரி செய்கின்றனர்.  

இந்த நிலையை சமாளிக்க மேலும் 2 புதிய படகுகள் கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி கூடுதலாக 2 படகுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு படகு 90 இருக்கையுடனும், மற்றொரு படகு 80 இருக்கையுடனும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 90 இருக்கை கொண்ட படகு மாடி படகாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 2 படகிலும் லைட் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பிறந்தநாள் உள்ளிட்ட விருந்து நிகழ்ச்சிகளை படகில் நடத்திக்கொள்ளலாம். படகிலேயே உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் சவாரியாகவும் சென்று வரலாம். இரவில் நங்கூரம் இட்டு ஆற்றில் தங்கிக்கொள்ளலாம். இந்த படகுகளின் தயாரிப்பு பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 வாரங்களில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு விடப்படும் என சுற்றுலா துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்