SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரபாண்டி முல்லையாற்றில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

2017-05-08@ 12:48:45

தேனி : தேனி அருகே வீரபாண்டி முல்லையாற்றின் தடுப்பணை பகுதியில் சுற்றுலாபயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளதால் எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும். இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது.

இதனால், ஆறுகள், கண்மாய்கள் வறண்டு போயுள்ளன. தேனி மாவட்டத்தில் முக்கிய அருவிகளாக உள்ள சுருளிஅருவி, கும்பக்கரை அருவிகள் உள்ளன. இதில் சுருளி அருவியில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதனால் கோடை விடுமுறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் சுருளி அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் நிலை உள்ளது.

கும்பக்கரை அருவியில் அவ்வப்போது தண்ணீர் வருவதும், பின்னர் தண்ணீர் வராமல் இருப்பதுமாக உள்ளது. இதனால், இவ்வருவிகளை நம்பி சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற செவ்வாய்கிழமை முதல் தொடங்க உள்ளது.

விழாவையொட்டி கடந்த ஒரு வாரகாலமாக நேர்த்திக்கடன் செலுத்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்துள்ளது.
இதேபோல, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளா நோக்கி செல்லும் சுற்றுலாப்பயணிகள் வீரபாண்டி முல்லையாற்றின் தடுப்பணையில் இருந்து தண்ணீர் அருவிபோல் வருவதை பார்த்து, இவ்வாற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்