SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கோடை விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2017-05-08@ 12:44:39

புதுச்சேரி : புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் சுண்ணாம்பாறு படகு குழாம் செயல்படுகிறது. இங்கு படகு வீடு, அதிவேக படகு, மிதி படகுகள், பயணிகளை கூட்டமாக அழைத்து செல்லும் சீ குரூஸ், வாட்டர் ஸ்கூட்டர் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. விடுமுறை நாட்களில் படகு குழாமில் கூட்டம் அலைமோதும். கடந்த காலங்களில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள், முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததால், லாபகரமாக இயக்க முடியாமல் திணறியது.

இந்நிலையில் சுற்றுலா வளர்ச்சிக்கழகத்துக்கு சேர்மனாக பாலன் நியமிக்கப்பட்டார். சுண்ணாம்பாறு படகு குழாம், லே கபே, ஊசுட்டேரி படகு தளத்தை  லாபகரமாக இயக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். குறிப்பாக டிக்கெட்டிங் இயந்திரம் மூலம் கணக்கு வழக்குகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டது. தேவையற்ற பொருட்களை வாங்கி கணக்கு காண்பிக்கும் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

முறைகேடுகள் முற்றிலும் நடைபெறாத வண்ணம் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதால் தற்போது வருவாய் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறையால் சுண்ணாம்பாறு படகுழாம் களை கட்டியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கட்டுகடங்காத கூட்டம் படகு குழாமில் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் காத்திருந்து, படகுகளில் பாரடைஸ் தீவுக்கு சென்றனர். பாரடைஸ் தீவில் உணவகம், நடைபாதை என தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்ததால் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.

கேண்டீன் ஊழியர் அத்துமீறல்சுண்ணாம்பாறு பாரடைஸ் தீவில் சுற்றுலா பயணிகள், ஆண்கள், பெண்கள் என கூட்டம், கூட்டமாக கடலில் ஜாலியாக குளித்து மகிழ்ந்தனர். அங்குள்ள கேண்டீனில் உள்ள  ஒரு சிலர் குடித்துவிட்டு, பெண்களை கேலி, கிண்டல் செய்தனர். இதனை அங்குள்ளவர்கள் தட்டிக்கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கேண்டீனில் குடிபோதையில் இருந்த சிலர் அநாகரீகமாக நடந்து கொண்டது பயணிகளை முகம் சுளிக்க வைத்தது. மேலாளரிடம் புகார் தெரிவிப்போம் என கூறியபோதும், அவர்களை ஆபாச வார்த்தையால் திட்டினார்.ஒருவழியாக போதையில் மிதந்த அந்த ஆசாமியை அழைத்து சென்று படுக்க வைத்தனர். சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்