SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாட்டு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்குமிடங்களும், சுற்றுலாக்களும்

2017-04-24@ 16:42:32

சுற்றுலா தனி மனிதனின் மகிழ்ச்சியை சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அரசுகளுக்கும் மகிழ்ச்சியை ‘தரும்’ தொழில். ஆம் மத்திய , மாநில அரசுகளுக்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் வருவாயும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் அந்நிய செலவாணியையும் ஈட்டித் தருகிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு சுற்றுலா வளர்ச்சிக்கு உதவுகின்றன.

மத்தியிலும், மாநிலத்திலும் அதற்கென தனித்துறைகள் அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களில் தகவல் மையங்களை நடத்துகின்றன. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க மட்டுமல்ல உள்ளூர் சுற்றுலா பயணிகளையும் கவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவற்றில் முக்கியமானவை தங்குமிடம், போக்குவரத்து என பயணிகளுக்கான வசதிகள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மாமல்லபுரம், கோவை, கன்னியாகுமரி, கொடைக்கானல், கிருஷ்ணகிரி, திருச்செந்தூர், திருச்சி, தஞ்சாவூர், ஏற்காடு, நீலகிரி, ஓசூர், காஞ்சிபுரம், ராமேஸ்வரம், ஒகனேக்கல், உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை, திருக்கடையூர் மற்றும் குற்றாலம், மதுரை, ஊட்டி(இளைஞர் விடுதி) ஆகிய இடங்களில் தலா 2 என மொத்தம் 23 இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன.

இங்கு தனியறைகள், இருவர் படுக்கை அறைகள், பல படுக்கை அறைகள், ஏசி அறைகள், டீலக்ஸ் அறைகள், குடில்கள் உள்ளன. பலர் ஒன்றாக தங்கும் அறைகள் சாதாரண வாடகையில் கிடைக்கும். மற்ற அறைகள் அந்தந்த ஊரில் உள்ள மலிவு விலை தனியார் விடுதிகளில் கிடைப்பதை விட கூடுதல் கட்டணம் என்பது மறுப்பதற்கில்லை. அறைகள் இருப்பு, கட்டணம் ஆகியவை குறித்தும், அறைகளை முன்பதிவு செய்யவும் www.tamilnadutourism.org என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.

வாடகையை பொருத்தவரை ஊருக்கு ஏற்ப 600 ரூபாய்க்கு இரு படுக்கை அறைகள் கிடைக்கின்றன. காஞ்சிபுரத்தில் 4 படுக்கைகள் கொண்ட அறை 800 ரூபாய்க்கும், 8 படுக்கைகள் கொண்ட அறை 1400 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. மாமல்லபுரத்தில் 4500 ரூபாய்க்கும் கடலோர ஏசி குடில்கள் உள்ளன. இது கிருஷ்ணகிரியில் 4000 ரூபாய்க்கும் கிடைக்கும். தனி அறைகளை விட பல படுக்கை அறைகளை பயன்படுத்தும் போது கட்டணம் குறையும்.

இந்த விடுதிகளில் உணவகங்களும் உள்ளன. எல்லா விடுதிகளிலும் காலை உணவு கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. தங்கும் நாட்களுக்கு முதல்நாள் அதாவது 24 மணி நேரத்திற்குள் பதிவை ரத்து செய்தால் அறைக்கான கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது. அதேபோல் 24 மணிி முதல் 48 மணி நேரத்திற்குள் என்றால் 70 சதவீதமும், 48 மணி நேரத்திற்கு முன்னாக அதாவது 2 நாட்களுக்கு முன்னதாக என்றால் 90 சதவீதமும் திருப்பித்தரப்படும். பல படுக்கை(டார்மிட்ரி) அறைகளுக்கு எப்போது ரத்து செய்தாலும் கட்டணம் கிடையாது.

நெரிசல் காலமான ஏப்.1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை இந்த விதிகளில் மாற்றமுண்டு. அறைகள் இருப்பை பொருத்து பதிவை முன்தேதிக்கோ, பின் தேதிக்கோ மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்றிக் கொள்பவர்கள் முன்பதிவை ரத்து செய்ய அனுமதி கிடையாது. தனியார் விடுதிகளில் வசூலிப்பது போன்று கட்டணத்துடன் சேவை வரி, சொகுசு வரி ஆகியவை சேர்த்து வசூலிக்கப்படும்.

- சஞ்ஜெயா

தங்குமிடங்கள், தினசரி, பல நாட்கள் சுற்றுலா குறித்து தகவலறிய...

மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,
எண்: 2, வாலாஜா சாலை, (திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில்), சென்னை- 600 002
தொலைபேசி எண்கள்: 044 - 25333850, 25333113, 25333333, 25333444
தொலைநகல் எண்கள்: 044 - 25333385, 25333567
மின்னஞ்சல் : ttdc@vsnl.com

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 02-12-2020

    02-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்