SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு நாள் போதும் தலைநகரில் சுற்றலாம்

2017-04-24@ 16:35:05

என்னதான் திட்டமிட்டு சுற்றுலா பயணத்தை தொடங்கினாலும் நேரத்தை சரிவர கடைபிடிக்க முடியவில்லை என்றால் எல்லா இடங்களையும் பார்ப்பது கேள்விக் குறிதான். அதை மட்டும் பார்த்திருந்தால் நன்றாக இருக்கும்’ என்றும், ‘எங்கே ஒரு இடத்திற்கு போனால் சட்டென்று கிளம்பினால்தானே’ குடும்ப உறுப்பினர்களை  ஊர் திரும்பும் போதும் திட்டிக் கொண்டிருந்தால் சென்ற சுற்றுலா இனிக்காது.

அதுமட்டுமல்ல சுற்றுலா சென்ற இடங்களில் அவற்றின் அழகில் மனதை பறிக் கொடுத்து நின்றாலும் தாமதம். அதனை தவிர்க்க உதவுவதுதான் சுற்றுலா நிறுவனங்கள் நடத்தும் சுற்றுலா பயணங்கள். அது ஒருநாள், 2 நாள், 3 நாள், ஒருவாரம், 10 நாட்கள் என விதவிதமாக இருக்கின்றன. சென்னை உள்ளிட்ட மாநில தலைநகர்களில் உள்ள சுற்றுலா தலங்களை ஒரே நாளில் பார்க்க சுற்றுலா நிறுவனங்கள் உதவுகின்றன. இதை மாநில அரசின் சுற்றுலா கழகங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் நடத்துகின்றன.

இந்த சுற்றுலா மூலம் ஒரு நாளில் தலைநகர்களில் உள்ள முக்கிய இடங்களை பார்த்து விடலாம். என்ன கடகடவென்று பார்க்க வேண்டியிருக்கும். சுற்றுலா வழிகாட்டிகள் எப்போதும் திருப்பதி கோவில் ‘ஜர்கண்டி’ ஆட்கள் மாதிரி ‘சீக்கிரம்.... சீக்கிரம்’ என்று விரட்டுவார்கள்.

ஆனால், வெறும் கட்டிடங்களை பார்த்து ஆச்சர்யப்படும் நமக்கு சுற்றுலா வழிகாட்டிகள் விவரங்களுடன் விளக்கும் போது கட்டிடம் கட்டிய காலம் முதல் எல்லாம் திரைப்படம் போல் காட்சிகளாக விரியும். இந்தப்பகுதியில் சென்னை, ஐதராபாத், பெங்களூர், அமராவதி, திருவனந்தபுரம், புதுடெல்லி தலைநகர் சுற்றுலா, அவற்றுக்கான சேவை தரும் அந்தந்த மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகங்களை எப்படி தொடர்புக் கொள்வது, கட்டணம உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

சென்னை

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை, அரசு அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், பாம்பு பண்ணை, கபாலீசுவரர் கோவில், மெரீனா கடற்கரை ஆகியவற்றுக்கு அரைநாள் சுற்றுலா அழைத்துச் செல்கிறது. காலை 8 மணி முதல் ஒரு மணி வரை அல்லது பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை என 2 வகையான அரை நாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது.

இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தபடி கட்டணம் ஒரு ஆளுக்கு 250 ரூபாய் கட்டணம். இது தவிர ஒருநாள் சுற்றுலாவாக மாமல்லபுரம், காஞ்சிபுரம், முட்டுக்காடு படகு இல்லம், விஜிபி தங்க கடற்கரை  அழைத்துச் செல்கின்றனர். இது தவிர மாங்காடு, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயில், செம்புலிவரம், பஞ்சட்டி, மேலூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அம்மன் கோவில்களுக்கு 550 ரூபாய் கட்டணத்தில் அழைத்துச் செல்லும் ஒரு நாள் சக்தி சுற்றுலா, கோயம்பேடு, திருமழிசை, பொன்விளைந்தகளத்தூர், திருபெரும்புதூர், பழையசீவரம், திருமலை வையாவூர், மாமல்லபுரம், திருவிடந்தை ஆகிய பெருமாள் கோவில்களுக்கு 600 ரூபாய் கட்டணத்தில் ஒருநாள் திருமால் தரிசன சுற்றுலாவும் அழைத்துச் செல்கின்றனர்.

மேலும் தகவல்களுக்கு.....
www.tamilnadutourism.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஐதராபாத்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஒருநாள் சுற்றுலாவாக காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 350 ரூபாய் கட்டணத்தில் பிர்லா மந்திர், சவ்மகாலா பேலஸ், சார்மினார், மெக்கா மசூதி, லாட் பஜார், சலார்ஜங் அருங்காட்சியகம், நிஜாம் ஜூப்ளி பெவுலியன், கோல்ெகாண்டா கோட்டை,  குதூப் ஷாகி டோம்ப், லும்பினி பார்க் ஆகியவற்றை பார்க்கலாம். முக்கிய இடங்களில் அனுமதி கட்டணம் தனி.

மேலும் தகவல்களுக்கு...
www.telanganatourism.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

திருவனந்தபுரம்

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில், குதிரமாளிகை அரண்மனை, கோவளம் கடற்கரை, சங்குமுகம் கடற்கரை, வேளி சுற்றுலா கிராமம், விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள். கேரளா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இவற்றில் பெரும்பான்மையான இடங்களை காலை 8 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், பகல் 1.30 மணி முதல் இரவு 7 மணி வரையில் என 2 அரை நாள் சுற்றுலாக அழைத்துச் செல்கிறது. ஒரு ஆளுக்கு கட்டணம் 350 ரூபாய். தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் 400 ரூபாய் வசூலிக்கின்றனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். இது தவிர கொச்சியில் கடல் கழிமுக நீர் வழித்தடத்தில்(பேக் வாட்டர்) ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். கரையோரங்களில் உள்ள ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களின் கிராமங்களை பார்த்து ரசிக்கலாம். காலை 8.15 மணி முதல் மாலை 6 மணி வரை அழைத்துச் செல்லும் இந்த சுற்றுலாவுக்கு மதியம் சைவ உணவுடன் 1250 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரைநாள் சுற்றுலாவும் உண்டு.

மேலும் தகவல்களுக்கு.....
www.keralatourism.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பெங்களூர்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள இடங்களான ராஜராஜேஸ்வரி கோவில், பன்னார்கட்டா உயிரியல் பூங்கா, சித்ரகலா பரிஷத், பிளாண்டேரியம், கர்நாடகா சட்டசபையான விதன்சவுதா, உயர்நீதிமன்றம் இஸ்கான் கோவில், கவிகங்காதரஸ்வரா கோவில், காளை கோவில், திப்பு கோடைக்கால அரண்மனை, லால்பாக் பூங்கா, அருங்காட்சியகம், கப்பன் பூங்கா ஆகியவற்றை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒருநாள் சுற்றுலாவாக  பார்வையிட 450 ரூபாய்.

மேலும் தகவல்களுக்கு.....
www.karnatakatourism.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அமராவதி

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதி இன்னும் முழுமையான தலைநகராக மாறவில்லஆனாலும் அங்குள்ள சிவன் கோவில், பிரமாண்ட புத்தர் சிலையுடன் கூடிய விகார், அருங்காட்சியங்கள் ஆகியவை உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துச் சென்றால் நகரம் நன்றாக வளர்ச்சியடைந்திருப்பதை பார்ப்பதுடன் 126 அடி உயர டாக்டர் அம்பேத்கர் சிலையையும் பார்க்கலாம். இப்போது சுற்றுலா அருகில் உள்ள விஜயவாடாவில் இருந்துதான்  ஆந்திர சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்குகிறது.

ஒரு நாள் சுற்றுலாவில் கனகதுர்கை கோவில், பல்லவர் கால உண்டவல்லி குகைக் கோவில், அமராவதி, பவானி தீவு, மங்களகிரி ஆகியவற்றை பார்க்க ஒருவருக்கு 400 ரூபாய் கட்டணம். ஆந்திராவில் இன்னொரு முக்கிய சுற்றுலாவாக இருப்பது ராஜமுந்திரி போலாவரத்தில் இருந்து பேருந்தில் தொடங்கி பட்டிசீமாவில் இருந்து பாபிகொண்டலு வரை சுற்றுலா படகில் மேற்கொள்ளும் பயணம்.
கோதாவரி ஆற்றில் மேற்கொள்ளப்படும் அந்த சுற்றுலா கரையோரத்தில் உள்ள கோவில்கள், ஆசிரமங்கள் ஆகியவற்றை பார்க்க அழைத்துச் செல்கின்றனர். காலை 6.30மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுலாவுக்கு காலை, மதிய உணவுடன் சேர்த்து 665 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு.....
www.aptdc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

டெல்லி

இந்தியாவின் தலைநகரான டெல்லி புதுடெல்லி, பழைய டெல்லி, துக்ளகாபாத் என 7 நகரங்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. டெல்லி முழுக்க முகலாய அரசர்கள் அவருக்கு முன்பு ஆண்ட கில்ஜிகள், அடிமை வம்சத்தவர்களின் அரண்மனைகள், கோட்டைகள்தான். அங்கு குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் யாருடைய துணையுமின்றி தனியாக சுற்றுவது சாத்தியம். ஆனாலும் டெல்லி மாநில சுற்றுலா கழகம் நடத்தும் அரை, ஒரு நாள் சுற்றுலாவில் டெல்லியின் பெரும்பகுதியை பார்க்கலாம்.

காலை 9 மணி முதல் பகல் 1.45 மணி வரை ஒருவருக்கு 275 ரூபாய் கட்டணத்தில் பிர்லா மந்திர், குதுப்மினார், ேலாட்டஸ் கோவில், காந்தி சுட்டுக் கொள்ளப்பட்ட வீடு, காட்சியகம் ஆகியவற்றுடன் போகும் வழியில் இந்தியா கேட், நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரங்கள் ஆகியவற்றையும், பகல் 2.15 மணி முதல் மாலை 6 மணி வரை 275 ரூபாய் கட்டணத்தில் செங்கோட்டை, பழையக்கோட்டை, காந்தி சமாதி, ஹூமாயூன் சமாதி ஆகியவற்றுடன் போகும் வழியில் பெரஸ்ஷா கோட்லா, இந்திரா காந்தி விளையாட்டரங்கம், இந்திரா காந்தி சமாதி, புராண கில்லா(கோட்டை)  பார்க்கலாம்.  

இரண்டு சுற்றுலாவையும் ஒருநாள் முழுக்க பார்க்க  450 ரூபாய் கட்டணம். டெல்லியை தவிர மற்ற ஊர்களில் ஏசி பஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் முக்கிய இடங்களை பார்க்கச் செல்லும் போது அனுமதி சீட்டும் நாம்தான் வாங்க வேண்டும். மேலும் சுற்றுலா வழிக்காட்டிகளுக்கும் சில இடங்களில் விதிகளின்படியும், சில இடங்களில் விருப்பத்தின் அடிப்படையிலும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் தகவல்களுக்கு.....
www.delhitourism.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

- ச.இர.அபூர்வா

vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BIPIN RAWAT

  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

 • BlackBox_Helicopter_Coonoor

  குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

 • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

  வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

 • Vaikunda Ekadasi

  பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

 • burundi-fire-8

  புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்