புதுகையின் பண்டைய கால வரலாறு
2016-12-21@ 13:02:40

புதுக்கோட்டை தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டத் தலைநகரமாகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக மலர்ந்தது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. பண்டைய புதுக்கோட்டையின் கிழக்கு பகுதியை கலசமங்கலம் என்றும், மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர்.
இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது, தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டை தனியரசு (சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74%. இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடுதல். வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்: ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும், பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன. இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடைமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெறுகின்றனர். கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன.
மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. புதுக்கோட்டை பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு, நல்லெண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், திருமயம் கோட்டை, விராலிமலை முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளது. இந்த சுற்றுலா தளத்திற்கு உலக நாடுகளில் இருந்து தினசரி வந்து செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் 1974ம் ஆண்டு தமிழ்நாட்டுன் இணைக்கப்பட்ட பிறகு நிர்வாக காரணங்களுக்கு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட்ட தாலுகா, 10க்கும் மேற்பட்ட ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள், 497 பஞ்சாயத்துகள் உள்ளன. தமிழகத்தில் எந்த கலெக்டர் அலுவலகத்திற்கும் கிடைக்காத சிறப்பு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு உண்டு.
மேலும் செய்திகள்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!