கோடை சீசனுக்காக தயாராகும் ரோஜா செடிகள்
2015-02-02@ 10:42:34

ஊட்டி, : கோடை சீசனில் நடக்கும் ரோஜா கண்காட்சிக்கு பூங்காவை தயார்படுத்தும் வகையில் ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலர் செடி களை கவாத்து செய்யும் பணி துவக்கப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. கோடை சீசனை அனுபவிக்க வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்போது பூங்காவில் 4 ஆயிரம் வீரிய ரகங்களை கொண்ட 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. மேலும் இந்த ரோஜா பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனி யாக இடம் உள்ளது. பாரம்பரிய ரோஜா பூங் காவில் உலகின் பல்வேறு நாடு களில் இருந்து இறக்கு மதி செய்யப்பட்ட ரோஜா செடிகள் நடவு செய்யப் பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கோடை சீசன் சமயத் தில் ரோஜா கண்காட்சிக்கு தயார்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்படும். அதன்படி ரோஜா மலர் செடிகளை கவாத்து செய்யும் பணிகள் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. மூன்று அடுக்குகளை கொண்ட பூங்காவின் மேற்பகுதியில் இருந்து கவாத்து செய்யும் பணிகள் துவங்கியது. பூங்கா முழுவதும் 90 சதவீதம் ரோஜா செடி கள் கவாத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகள் விரைவாக துளிர் விடும் வகையில் வெட்டப்பட்ட பகுதியில் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளுக்கு உரமிடும் பணிகளும் நடந்து வருகிறது. கவாத்து செய்யப்படும் ரோஜா செடிகள் ஏப்ரல் மாதத்தில் பூக்க துவங்கி விடும். ரோஜா கண்காட்சி சமயத்தில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
உலகின் மிக உயர்ந்த சிவலிங்கத்தை பார்க்க குவியும் சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை ஒரே நாளில் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்த்தனர்
கோடை விடுமுறை, கொளுத்தும் வெயில் குமரியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல் ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் திருவள்ளுவர் சிலையை பார்த்தனர்
சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய கன்னியாகுமரி
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்