மே மாத கண்காட்சிக்காக தயாராகிறது ரோஜா பூங்கா
2015-01-24@ 10:17:53

ஊட்டி, : கோடை சீசனில் நடக்கும் கண்காட்சிக்கென ஊட்டி ரோஜா பூங்காவை தயார்படுத்த மலர் செடிகளை கவாத்து செய்யும் பணி துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் நிலவும் மிதமான சீதோஷ்ண நிலை யை அனுபவிக்க ஏராள மான சுற்றுலா பயணிகள் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர். குறிப்பாக கோடை சீசன் சமயத்தில் பள்ளிகளில் தேர்வு விடுமுறைகளை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏப்ரல், மே மாதத்தில் ஊட்டிக்கு அதிகளவில் வருவார்கள். கோடை சீசனை அனுபவிக்க வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவை சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு அணிவகுப்பு மற்றும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கோடை விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்போது பூங்காவில் 4 ஆயிரம் வீரிய ரகங்களை கொண்ட 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. மேலும் இந்த ரோஜா பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனி யாக இடம் உள்ளது. பாரம்பரிய ரோஜா பூங்காவில் உலகின் பல்வேறு நாடு களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோஜா செடிகள் நடவு செய்யப் பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை சீசன் சமயத்தில் ரோஜா கண்காட்சி தயார்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்படும். அதன்படி வருகிற கோடை சீசன் சமயத்தில் நடக்கும் ரோஜா கண்காட்சிக்கென பூங்கா வில் உள்ள ரோஜா செடி களை கவாத்து செய்யும் பணிகள் நேற்று துவங்கின.
கவாத்து பணிகளை கலெக்டர் சங்கர் துவக்கி வைத்தார். மூன்று அடுக்கு களை கொண்ட பூங்காவில் மேற்பகுதியில் இருந்து கவாத்து செய்யும் பணி களில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள னர். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குநர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகள் விரைவாக துளிர்விடும் வகையில் வெட்டப்பட்ட பகுதியில் மருந்துகள் போடப்பட்டு வருகிறது. கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளுக்கு உர மிடும் பணிகளும் நடந்து வருகிறது. ரோஜா பூங்கா வில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவாத்து பணிகள் சில வாரங்களில் முடிந்து விடும். காவத்து செய்யப்படும் ரோஜா செடிகள் ஏப்ரல் மாதத்தில் பூக்க துவங்கிவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!
இரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் வண்ண நிறங்களில் பூத்து குலுங்கும் கள்ளி செடி : சுற்றுலா பயணிகள் ஈர்ப்பு
நீலகிரி நீராவி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள்!
ஊட்டியில் கிரேட்டர் கார்மரண்ட் பறவைகள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!