பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு
2015-01-12@ 15:04:06

கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வரும் 15, 16, 17ம் ஆகிய தேதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுசீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நெருக்கடியின்றி நுழைவுச்சீட்டு பெறுவதற்காக 20 நுழைவுச்சீட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் மற்றும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க பார்வையாளர்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளது. மேலும் வனத்துறை மற்றும் காவல் துறையை சார்ந்த பணியாளர்கள் சாதாரண உடையில் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பார்வையாளர்களுக்கு எதிர்பாராத வகையில் ஏற்படும் உடல் நலக் குறைவு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக மருத்துவக் குழு ஒன்று காணும் பொங்கல் அன்று ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை செய்யும் பொருட்டு மாநகர போக்குவரத்து மூலம் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வத்தல் மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஒகேனக்கல்லில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குற்றாலம் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு அருவியில் குளித்து பயணிகள் உற்சாகம்
சுற்றுலா பயணிகள் வராமல் களையிழந்த ஒகேனக்கல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!