ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு
2020-01-22@ 16:09:31

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பனிக்காலத்தில் மட்டும் வளரக்கூடிய அசிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணிகள், கள்ளிச் செடிகள் மற்றும் மரங்கள் ஆகியவை உள்ளன. அதேபோல், பல வெளி நாடுகளில் காணப்படும் புகழ் வாய்ந்த மரங்கள், மலர் செடிகள் இங்கு உள்ளது. இவைகள் அந்தந்த பருவங்களில் மட்டும் பூக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. தற்போது பனிக்காலம் என்பதால், சீனா நாட்டில் வசந்த காலத்தை வரவேற்கும் குயின் ஆப் சைனா மலர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மரங்களில் பூத்துள்ளது.
அதேபோல், இத்தாலியன் பூங்காவில் பனிக்காலத்தில் குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் டிசம்பருக்குள் பூக்கும் அசிலியா மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இந்த மலர்கள் எப்போதும் பனிக்காலத்தில் மட்டுமே பூக்கக் கூடியது. சில மாதங்கள் இந்த செடிகளில் மலர்கள் இன்றி புதர் போன்று காட்சியளிக்கும். தற்போது முதல் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் அகற்றப்பட்டு, விதைப்பு பணிகளுக்காக பாத்திகள் மண் தொட்டிகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ள அசிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மேலும் செய்திகள்
மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!
இரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை
ஊட்டி தாவரவியல் பூங்காவில் வண்ண நிறங்களில் பூத்து குலுங்கும் கள்ளி செடி : சுற்றுலா பயணிகள் ஈர்ப்பு
நீலகிரி நீராவி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள்!
ஊட்டியில் கிரேட்டர் கார்மரண்ட் பறவைகள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!