SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டியில் கிரேட்டர் கார்மரண்ட் பறவைகள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

2019-11-26@ 17:28:03

ஊட்டி,:  நீலகிரி  மாவட்டத்தில் தற்போது நீரோடை மற்றும் அணைகளின் கரையோரங்களில் கிரேட்டர்  கார்மரண்ட் பறவைகள் அதிக அளவு காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள்  மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டம்  மலை மாவட்டம் என்பதால் இங்கு ஒரு சில பறவைகள் மட்டுமே காணப்படுகிறது.  அதேசமயம் சமவெளிப் பகுதிகளில் மற்றும் அண்டை நாடுகளில் காலநிலை மாற்றம்  ஏற்படும்போது சில பறவைகள் இடம் பெயர்ந்து இங்கு வருவது வழக்கம். பொதுவாக  குளிர் காலமான நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பல்வேறு பறவை இனங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வருவது வழக்கமாக  உள்ளது.

குறிப்பாக கிரேட்டர் கார்மரண்ட், டபுள் கஸ்டர் போன்ற பறவைகள்  இங்குள்ள நீர்நிலைகளில் காணப்படுவது வாடிக்கை. தற்போது பனிக்காலம் துவங்கி  உள்ளதாலும், இம்முறை பெய்த மழையால் நீர் நிலைகளில் அதிக தண்ணீர்  காணப்படுவதாலும் உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக கிரேட்டர் கார்மரண்ட்  பறவைகள் அதிக அளவு வந்துள்ளன. இவைகள் ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில்  பல்வேறு பகுதியில் காணப்பட்டாலும் நீலகிரி மாவட்டத்தில் அரிதாகவே  காணப்படுகின்றன.  இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள தலைகுந்தா பகுதியில்  உள்ள காமராஜ் சாகர் அணையில் தற்போது தண்ணீர் அதிகமாக காணப்படுவதால்  அங்குள்ள மீன்களை வேட்டையாடவும் கரையோரங்களில் உள்ள புழுக்களை  உண்பதற்காகவும் இந்த பறவைகள் இங்கு முகாமிட்டுள்ளன. ஆங்காங்கே ஓரிரு  பறவைகளும், சில இடங்களில் கூட்டமாகவும் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களும் இந்த பறவைகளை,  புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்