இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
2019-10-09@ 13:08:13

சிதம்பரம் : பூஜை விடுமுறையால் பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து களைகட்டியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் எனும் சுரபுண்ணை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன.
கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை இப்பகுதிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட்டம், கூட்டமாக பறவைகள் வரும். விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்துக்கு வருகின்றனர். படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் சரஸ்வதி மற்றும் ஆய்த பூஜை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பிச்சாவரத்திற்கு வந்தனர். மேலும், வடமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றலா பயணிகள் அனைவரும் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு படகுகளில் சென்று மாங்குரோவ் காடுகளையும், அடர்ந்த காடுகளில் ஆங்காங்கே தென்படும் பறவைகளையும் பார்த்து ரசித்தனர்.
மேலும் செய்திகள்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து சுரபுன்னை காடுகளை ரசித்தனர்
தொடர் விடுமுறை எதிரொலி பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறை பிச்சாவரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் கடும் வெயிலால் அவதி
படித்துறை அமைத்து வாலாஜா ஏரியை சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
அடிப்படை வசதிகள் ஏதுமில்லை சுற்றுலாத்துறை மெத்தனத்தால் மேம்பாடு அடையாத பிச்சாவரம் சுற்றுலா பயணிகள் அதிருப்தி
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!