தொடர் விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மூன்று நாட்களில் ரூ4.62 லட்சம் வருவாய்
2019-10-09@ 12:42:57

கோவை:தொடர் விடுமுறையையொட்டி கோவை குற்றால அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடந்த மூன்று நாட்களில் பல்வேறு கட்டணங்கள் வாயிலாக வனத்துறைக்கு ரூ.4.62 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.கோவை குற்றாலம் அருவி சாடிவயல் அருகே உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளித்து மகிழ கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் அதிக அளவில் வருவது வழக்கம். கடந்த 6 மாதங்களாக வறட்சி மற்றும் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக அடிக்கடி மூடப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றமடைந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கோவை குற்றால அருவி மீண்டும் திறக்கப்பட்டது. ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையையொட்டி கோவை குற்றால அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிக்கு செல்ல நுழைவு கட்டணம், வாகன நிறுத்த கட்டணம், கேமரா பயன்படுத்தும் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் வனத்துறையால் வசூலிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் பல்வேறு கட்டணங்கள் வாயிலாக ரூ.4.62 லட்சம் வனத்துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக நேற்று ரூ.1.80 லட்சம் வசூலாகி உள்ளது.
அதேபோல கடந்த மூன்று நாட்களில் பெரியவர்கள், குழந்தைகள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போளுவாம்பட்டி வனத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் அதிக ஆழமுள்ள, ஆபத்தான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அடிக்கடி எச்சரிக்கை செய்யும் பணியையும் மேற்கொண்டனர்.
மேலும் செய்திகள்
வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகள் ரசிப்பு
கோத்தகிரியில் ஆர்ப்பரிக்கும் உயிலட்டி நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
வால்பாறையில் மூடுபனி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தொடர் விடுமுறை முடிந்தும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை
தொடர் விடுமுறையால் மக்கள் படையெடுப்பு : சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திழுக்கும் வாகமண்
51 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் நாளை திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்