SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்னசுருளி அருவியில் நீர்வரத்து சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பு

2019-09-24@ 12:27:23

வருசநாடு: தேனி மாவட்டம் கோம்பைத்தொழு அருகே உள்ளது சின்னசுருளி அருவி உள்ளது. தற்போது கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உசிலம்பட்டி, மதுரை, போடி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனால்  மயிலாடும்பாறை காவல்துறை அதிகாரிகளும் மேகமலை வனத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் தற்போது ஈடுபட்டு
வருகின்றனர். மேலும் அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் வனத்துறை சார்பாக உடமைகள் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.

மேலும் பெண்கள் கவனமாக செல்ல வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கோம்பைத்தொழு முன்னாள் கவுன்சிலர் பெருமாள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை சார்பாக சுற்றுலாபயணிகள் குளிப்பதற்கு தடை விதித்திருந்தனர். இந்நிலையில் கனமழையின் காரணமாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது மேலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்வதற்கும் வனத் துறை சார்பாக விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அருவிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அத்துடன் படிக்கட்டுகள் கம்பிகள் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ேதனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்