குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குதூகலம்
2019-09-23@ 17:09:28

தென்காசி, குற்றாலத்தில் நேற்று மதியம் வரை வெயில் அடித்த போதும் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் விழுந்தது. குற்றாலத்தில் தொடர்ந்து 3 தினங்களாக வெயில் அடித்து வந்தது. நேற்று மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியத்திற்கு பிறகு சற்று இதமான சூழல் நிலவியது. வெயிலடித்த போதும் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் விழுந்தது.
மெயினருவியில் ஆண்கள் பகுதியில் நன்றாகவும் பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது. பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவிகளில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் செய்திகள்
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு - அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பெரியார் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு; ஆர்வமுடன் குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் இதமான சூழல்: அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலத்தில் சாரலுடன் சீசன் அருமை: சுற்றுலா பயணிகள் 'குஷி'
சாம்பவர்வடகரையில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி : செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் நீடிக்கும் குளு குளு சூழல் : சுற்றுலா பயணிகள் உற்சாகம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!