கொடைக்கானலில் கிளைமேட் சூப்பர்: தொடர்மழையால் நிரம்பிய ஏரியில் ஜாலி படகு சவாரி
2019-09-16@ 17:43:26

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்தது. தொடர்மழையால் நிரம்பிய ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மலைகளின் இளவரசி கொடைக்கானலில் வார இறுதி நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அங்கு கூடிய சுற்றுலா பயணிகள் கோக்கர்ஸ் வாக், தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளை முற்றுகையிட்டு, இயற்கை அழகை ரசித்தனர்.
கொடைக்கானலில் பெய்த தொடர் சாரல் மழையால் கொடைக்கானல் ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்த குறைந்த அளவிலான மலர்களை சுற்றுலாப்பயணிகள் ரசித்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நகர் முழுவதும் மேகங்கள் சூழ்ந்து இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் விடுமுறையை கொண்டாட்டமாக அனுபவித்தனர்.
மேலும் செய்திகள்
மன்னவனூர் சுற்றுலாப் பகுதியை பார்வையிட மீண்டும் அனுமதி : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
மழையுடன் இதமான சீதோசணம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் 'செர்ரி பிளாசம்'
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
கடுங்குளிர் காணாமல் போச்சு இதமான குளிருக்கு மாறினாள் ‘இளவரசி’
புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்
24-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்