குற்றாலத்தில் நீடிக்கும் குளு குளு சூழல் : சுற்றுலா பயணிகள் உற்சாகம்
2019-08-28@ 12:44:39

தென்காசி: குற்றாலத்தில் நேற்று சாரல் நன்றாக இருந்தது. பகல் முழுவதும் வெயில் இல்லை. குளு குளு சூழல் காரணமாக சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். குற்றாலத்தில் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து சீசன் நன்றாக உள்ளது. அவ்வப்போது சாரல் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் அவ்வளவாக இல்லை. நேற்று பகல் முழுவதும் வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இடையிடையே சாரல் பெய்தது. இதமான தென்றல் காற்றும் வீசியது.
மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. விடுமுறை நாளான நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் கூட்டம் நன்றாக இருந்த நிலையில், நேற்று சுமாராக காணப்பட்டது. இதனால் மெயினருவி தவிர மற்ற அருவிகள் அனைத்திலும் வரிசையின்றி குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் நிலவும் குளுகுளு சூழல் சுற்றுலா பயணிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு - அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பெரியார் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு; ஆர்வமுடன் குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் இதமான சூழல்: அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குதூகலம்
குற்றாலத்தில் சாரலுடன் சீசன் அருமை: சுற்றுலா பயணிகள் 'குஷி'
சாம்பவர்வடகரையில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி : செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!