கடுங்குளிர் காணாமல் போச்சு இதமான குளிருக்கு மாறினாள் ‘இளவரசி’
2018-02-07@ 12:29:22

கொடைக்கானல்: கடும் குளிர் நிலை மாறி கொடைக்கானலில் இதமான குளிர் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இரவு மட்டுமின்றி, அதிகாலையிலும் ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு கடுமையான குளிர் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டது. சுற்றுலாப்பயணிகளின் வருகையும் குறைவாக இருந்ததால் கடை உரிமையாளர்களும் கவலையடைந்தனர்.
தற்போது கடும் குளிர் சூழல் மாறி, கடந்த சில நாட்களாக கொடைக்கானல் இதமான குளிருக்கு மாறி வருகிறது. பகலில் வெயிலுடன் இதமான குளிரும், இரவில் சற்று கூடுதலான குளிரும் இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் ரசித்து அனுபவிக்கும் தட்பவெப்ப நிலை ஏற்பட்டிருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொ டைக்கானலில் வரலாறு காணாத அளவுக்கு உறைபனி கொட்டி மக்களை நடுங்க வைத்தது.
தற்போது இந்நிலை மாறி சுற்றுலாப்பயணிகள் அனுபவிப்பதற்கு ஏற்றதுபோல் நல்ல தட்பவெப்பம் நிலவி வருகிறது. இதனால் வரும் நாட்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றனர். கொடைக்கானலில் வெப்பநிலை பகலில் அதிகபட்சமாக 17 டிகிரி, இரவில் சராசரியாக 12 டிகிரி பதிவாகி உள்ளது.
கோடை காலத்தை வரவேற்க ‘கொட்டியது’
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பகலில் வெயில் அடித்தும், இரவில் உறைபனி படிப்படியாக குறைந்து வந்தது. நேற்றுமாலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து மஞ்சு மூட்டம் காணப்பட்டு சாரலாக தூறியது. மஞ்சு மூட்டத்துடன் மழை பெய்வது குளிர் காலம் குறைந்து கோடைகாலத்தை வரவேற்பதற்கான அறிகுறியாம். இதனால் பொதுமக்கள், சுற்றுலா தொழில்புரிவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மன்னவனூர் சுற்றுலாப் பகுதியை பார்வையிட மீண்டும் அனுமதி : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
மழையுடன் இதமான சீதோசணம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் கிளைமேட் சூப்பர்: தொடர்மழையால் நிரம்பிய ஏரியில் ஜாலி படகு சவாரி
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் 'செர்ரி பிளாசம்'
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!