SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவர்னர் கிரண்பேடி நடவடிக்கையால் மகிழ்ச்சி: கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய குவியும் பொதுமக்கள்

2018-02-06@ 14:39:41

புதுச்சேரி, பிப். 6: புதுச்சேரி கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய நாளுக்கு நாள் மக்கள் அதிகமாக வருகின்றனர். இதனால் அதிகளவில் படகுகளை இயக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுவை கனகன் ஏரியில் ஆகாய தாமரை படர்ந்திருந்த நிலையில், அதனை கடந்த 2 மாதத்துக்கு முன்பு கவர்னர் கிரண்பேடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆகாய தாமரைகளை அகற்ற உத்தரவிட்டார். இப்பணியை கல்லூரி மாணவர்கள் செய்தனர். இதனையறிந்த கவர்னர், இப்பணியை அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவும் இப்பணியை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பொதுப்பணி, வனத்துறை, காவல்துறை, சுற்றுலாத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளை ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை ஆய்வு பணி பெயரில் வரவழைத்து அறிவுரைகள் வழங்கினார். அதன்படி ஆகாய தாமரைகள் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டதோடு, வாக்கிங் செல்வதற்காக ஏரிக்கரை சமன்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும், இரண்டு கழிப்பறைகளும் கட்டப்பட்டன. மீண்டும் கனகன் ஏரியை ஆய்வு செய்த கவர்னர், அதனை சுற்றுலா தலமாக மாற்ற படகு சவாரி துவங்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து, சோதனை அடிப்படையில் படகுகள் இயக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 3ம் தேதி கனகன் ஏரி அர்ப்பணிக்கும் விழா நடந்தது.

இதில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏரியை அர்ப்பணித்தார். அதேவேளையில் படகு சவாரியை தொடங்கி வைத்தார். இதற்காக அப்பகுதி மக்கள் கவர்னருக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது கனகன் ஏரியில் 4 மிதி படகுகள் உள்ளன. ஒரு நபருக்கு ரூ.5 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் ஆர்வமுடன் வந்து படகு சவாரி செய்கின்றனர். இது நகரப்பகுதியில் அமைந்திருப்பதால் மாலை நேரங்களில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் வருகின்றனர். ஆனால், போதிய படகுகள் இல்லாததால் அவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

கூடுதல் படகுகளை இயக்கினால் அனைவரும் படகு சவாரி செய்ய ஏதுவாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக சுற்றுலாத்துறை இயக்குநர் முனிசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, கனகன் ஏரியின் மொத்த ஆழம் 1.80 மீட்டர்தான். தற்போது ஏரியில் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. இதனால் இயந்திர படகுகளை இயக்க முடியாது. இதன் காரணமாகவே, 4 மிதி படகுகளை மட்டும் இயக்கி வருகிறோம். மேலும், ஏரியை தூர்வார உதவிய தன்னார்வலர்கள் ஒரு வாரத்துக்கு இலவசமாக படகு சவாரி செய்யவும் அனுமதி வழங்கியுள்ளோம். மேலும், பொதுமக்கள் நலன் கருதி கூடுதலாக 2 மிதி படகுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்