SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து சுரபுன்னை காடுகளை ரசித்தனர்

2018-01-17@ 12:25:16

புவனகிரி:  தமிழகத்தில் சுற்றுலா மையங்களில் புகழ்பெற்ற தலமாக சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் சுரபுன்னை காடுகள் இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. இவ்வகை சுரபுன்னை காடுகளை படகில் சென்று சவாரி செய்து பார்ப்பது ஆனந்தமாக இருக்கும். கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமையாக காணப்படும் இந்த காடுகள் கண்கொள்ளா காட்சியாகும்.

காணும் பொங்கலையொட்டி நேற்று களை கட்டியது. தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் காட்டுப் பகுதிக்கு தங்களது குடும்பத்தினருடன் படகுகளில் சவாரி சென்று மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் படகு சவாரி செய்யும் நேரம் குறைக்கப்பட்டது. வழக்கமான நாட்களில் 4 மணி நேரம் வரை அனுமதிக்கப்படும் படகு சவாரி நேற்று 40 நிமிடமாக குறைக்கப்பட்டது. மோட்டார் படகுக்கு 40 நிமிடமும், துடுப்பு படகுக்கு 30 நிமிடமாக நேரம் குறைக்கப்பட்டது.

காடுகளில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள், இதுபோன்ற ஒரு இடத்தை தங்களது வாழ்நாளில் பார்த்தது இல்லை எனவும், காடுகளுக்குள் படகு சவாரி செய்தது புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறினர். மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து பல மணி நேரம் பயணம் செய்து வந்திருந்ததாகவும், ஆனால் அதற்கேற்றாற்போல் இந்த இடத்தை அனுபவித்து ரசித்ததாகவும் கூறினர்.

படகு போட்டிகள்
பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது அப்பகுதி மீனவர்கள் சார்பில் படகு போட்டிகள் நடத்தப்பட்டது. துடுப்பு படகில் சுமார் 100 மீட்டர் தூரம் வரை நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்