SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் விடுமுறையால் ஆழியாருக்கு 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை

2018-01-02@ 14:59:59

பொள்ளாச்சி, ஜன.2: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு, தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த சுற்றுலா பகுதியில் ஒன்றான ஆழியார் அணைக்கு, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையையொட்டி கடந்த மாதம் 23ம் தேதி முதல் ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இப்படி, கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

இதில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி, ஆழியார் அணை மற்றும் பூங்காவிற்கு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்களில் அதிகளவில் வந்திருந்தனர்.
அவர்கள், அணையின் மேல்பகுதியில் வெகுநேரம் சுற்றிபார்த்துவிட்டு, பின்  பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் அணைக்கு முன்புள்ள பூங்காவில் பல மணிநேரம் பொழுதை கழித்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் பலர் படகுசவரி செய்து மகிழ்ந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்தாலும், பலர் வெகுநேரம் காத்திருந்து சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையையொட்டி ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால், போலீசார் ஆங்காங்கே நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அதுபோல், ஆழியார் அருகே உள்ள வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கும், நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. அருவி முன்புள்ள இடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒவ்வொருவராக வந்து வெகுநேரம் நின்று குளித்தனர். மேலும், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர், குரங்கு அருவியருகே யானை சவாரி செய்து மகிழ்ந்து சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்