SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

2018-01-02@ 14:47:30

கொடைக்கானல்: புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் குவியத் துவங்கினர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிகளவில் வந்திருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டை வரவேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.  சாலைகளில் ஆடிப்பாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நேற்று மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், பிரயண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன. மேலும் ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் ரைடிங் செய்தும் உற்சாகமடைந்தனர். ஆன்மீக தலங்களான கொடைக்கானல் புனித சலேத் தேவாலயம், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில், குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் கொடைக்கானலில் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gurunanak30

    குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

  • bushfire30

    ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

  • thiruvannamalai30

    அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

  • vivasayigal30

    நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்