கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
2017-12-26@ 14:11:02

பொள்ளாச்சி: கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆழியாரில் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகமாக இருந்தது. ஆழியாருக்கு வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். ஆழியாருக்கு வரும் பயணிகள், அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு, பின் பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழிப்பர். மேலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் படகு சவாரி செய்து மகிழ்வர்.
இந்நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதால் ஆழியாரில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள் பலர் வெகுநேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஆழியாரில் நேற்று ஒரே நாளில் 3000க்கும் மேற்பட்ட பயணிகள் குவிந்தனர். பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தொடர்ந்து இந்த மாதம் இறுதி வரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால் ஆங்காங்கே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதே போல் குரங்கு அருவியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குரங்கு அருவி அருகே வனத்துறை சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள யானை சவாரி செல்வதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். தற்போது யானை சவாரிக்கு வனப்பகுதி வழியாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. வழியில் பறவைகள், லங்கூர் குரங்குகள் போன்ற அறிவகை விலங்குகளை காணமுடிவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துதுள்ளனர். இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் காத்து நின்று சவாரி சென்றனர்.
மேலும் செய்திகள்
40 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு
51 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறப்பு
பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழும் பக்தர்கள்
கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தொடர் விடுமுறையால் குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!