வெயிலின் தாக்கம் அதிகரிப்பு திற்பரப்பில் திரண்ட சுற்றுலா பயணிகள்
2017-11-20@ 11:44:15

குலசேகரம், நவ.20: குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை ஓரளவு கைகொடுத்தது. இதனால் வறண்டு கிடந்த பல நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. ஆனால் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.
வெயிலில் இருந்து தப்பிக்க நீர்சார்ந்த சுற்றுலா தலங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வருகின்றனர். மேலும் உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் பதார்த்தங்களையும் நாடி வருகின்றனர். இதனால் நொங்கு, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, பழங்கள் போன்றவற்றின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 தினங்கள் விடுமுறை என்பதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது.
மேலும் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு திரும்பினர். மேலும் சூழியல் சுற்றுலா தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பேச்சிப்பாறை, கோதையாறு, குற்றியாறு இரட்டை அருவி போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்தது. மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் நேற்று அதிகமானோர் சுற்றுலா வந்திருந்தனர்.
மேலும் செய்திகள்
குமரியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
திற்பரப்பில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
திற்பரப்பு அருவியில் உற்சாக குளியல் - 'செல்பி'
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறை முடிந்தும் களை கட்டும் திற்பரப்பு அருவி
கோடை மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்